/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கர்நாடகா பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு ;குறைந்த நுழைவு கட்டணத்தால் மகிழ்ச்சி

ADDED : மே 15, 2024 12:22 AM

ஊட்டி:ஊட்டியில் உள்ள கர்நாடகா பூங்காவுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கர்நாடகா மாநிலம் தோட்டக்கலை துறைக்கு சொந்தமான, கர்நாடக பூங்கா, ஊட்டி பெர்ன்ஹில் பகுதியில் அமைந்துள்ளது. அமைதியான சூழலில் அமைந்துள்ள இப்பூங்காவில், பல்வேறு வகைகளில் வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
மேலும், பூங்காவில் தொங்கு பாலம், செயற்கை நீரூற்று மற்றும் நர்சரி உட்பட, அனைத்து அம்சங்கள் நிறைந்துள்ளன. தற்போது மழை பெய்து வரும் நிலையில், பூங்கா புல் தரை பசுமைக்கு திரும்பி உள்ளது.
இங்கு, 'மேரேஜ் போட்டோ ஷூட்' அதிகளவில் எடுக்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது, ஊட்டி தாவரவியல் பூங்காவில், மலர்கண்காட்சி துவங்கி நடந்து வருகிறது.
இந்த பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர், கர்நாடகா பூங்காவுக்கு சென்று, அழகை கண்டுக் களித்து செல்கின்றனர். பூங்கா நுழைவு கட்டணமாக, பெரியவர்களுக்கு, 50 ரூபாய், சிறுவர்களுக்கு, 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், குறைந்த கட்டணத்தில், பூங்காவின் அழகை பார்வையாளர்கள் ரசித்து செல்கின்றனர்.