/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி தாவரவியல் பூங்காவில் அதிகரித்த சுற்றுலா பயணியர்
/
ஊட்டி தாவரவியல் பூங்காவில் அதிகரித்த சுற்றுலா பயணியர்
ஊட்டி தாவரவியல் பூங்காவில் அதிகரித்த சுற்றுலா பயணியர்
ஊட்டி தாவரவியல் பூங்காவில் அதிகரித்த சுற்றுலா பயணியர்
ADDED : மே 02, 2024 02:24 AM

ஊட்டி,:ஊட்டியில் வரும், 10ம் தேதி, தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி துவங்கி, 20ம் தேதி வரை, 10 நாட்கள் நடக்கிறது. சுற்றுலாப் பயணியரை கவரும் விதமாக, 250 வகைகளில், ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் நாற்றுகள் மண் தொட்டிகளில் நடவு செய்து, தற்போது மலர்கள் பூத்து குலுங்குகின்றன. மலர்கள் வெயிலில் வாடாமல் இருக்க, மாடங்களில் வைக்கப்பட்டு, பாதுகாக்கப்படுகிறது. சமவெளி பகுதியில், சுட்டெரிக்கும் வெயில் நிலவுவதால், சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு படை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தொழிலாளர் தினமான நேற்று, தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்காவில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
காலை மற்றும் பகல் நேரத்தில் கடும் வெயில் இருந்ததால், மாலை, 4:00 மணிக்கு மேல், தாவரவியல் பூங்காவில் கூட்டம் அதிகரித்து. இதமான காலநிலையில் அனைவரும் புல்வெளிகளில் அமர்ந்திருந்தனர். நேற்று மாலை வரை, 20 ஆயிரத்து 400 பேர் பூங்காவுக்கு வருகை தந்தனர்.

