/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலிவு விலை மருந்து விற்பனை அதிகரிப்பு
/
மலிவு விலை மருந்து விற்பனை அதிகரிப்பு
ADDED : ஜூலை 06, 2024 01:45 AM
அன்னுார்:மத்திய அரசின் மலிவு விலை மருந்துக்கு மக்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது.
மத்திய அரசு, பிரதம மந்திரி இந்திய மக்கள் மருத்துவத் திட்டத்தை கடந்த 2015ல் துவக்கியது. இத்திட்டத்தில் நாடு முழுவதும் 9,000க்கும் மேற்பட்ட மலிவு விலை மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளும் திறக்கப்பட்டு செயல்படுகின்றன. இந்த மருந்தகங்களில், நீரிழிவு, ரத்த அழுத்தம், புற்றுநோய், இரைப்பை பிரச்சனை, வைட்டமின் குறைபாடு, ஆன்டிபயாட்டிக் ஆகியவற்றுக்கு 700 வகையான மருந்துகள் கிடைக்கின்றன.
கணேசபுரத்தில் மத்திய அரசின் மலிவு விலை மருந்தகம் திறக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் முடிந்து நேற்று முன்தினம் ஏழாவது ஆண்டு துவங்கியுள்ளது. இதுகுறித்து கடை நிர்வாகிகள் கூறுகையில், 'பெரிய நிறுவனங்களின் பிராண்டட் மருந்துகளில் என்ன மூலக்கூறுகள் உள்ளனவோ, அவை குறைந்த விலையில் ஜெனரிக் மருந்துகளாக இங்கு தரப்படுகின்றன.
டாக்டர்கள் தரும் மருந்து சீட்டில் உள்ள அதே மருந்தின் அதே பயன் தரும் மூலக்கூறுகள் அடங்கிய ஜெனரிக் மருந்துகளை இங்கு பெறலாம். விலை 70 சதவீதம் குறைவு. மக்களிடம் மலிவு விலை மருந்துக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. விற்பனை கூடியுள்ளது,' என்றனர். இதேபோல், தென்னம்பாளையம் சாலையில், மூன்றாவதாக ஆண்டாக மலிவு விலை மருந்தகம் செயல்பட்டு வருகிறது.