/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுதந்திர தின விழிப்புணர்வு ஏற்படுத்திய இளைஞர்கள்
/
சுதந்திர தின விழிப்புணர்வு ஏற்படுத்திய இளைஞர்கள்
ADDED : ஆக 15, 2024 11:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்: பந்தலுார் பகுதியை சேர்ந்த மகாத்மா காந்தி பொது சேவா மைய அமைப்பாளர் நவ்ஷாத் என்பவர், குடியரசு மற்றும் சுதந்திர தின விழா நாட்களில், சட்டை முழுவதும் தேசிய கொடிகளை குத்திக்கொண்டு கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். நேற்று, தனது சட்டையில், 78 சுதந்திர கொடி சின்னங்களை குத்தி வலம் வந்தது, அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
-இதேபோல், உப்பட்டி பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சூசைராஜ். இவர் காய்கறிகளை கொண்டு, நாட்டின் வரைபடத்தை உருவாக்கி, அதில் சுதந்திர கொடியையும் காய்கறிகளால் உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியது பொதுமக்களின் பாராட்டை பெற்றது.

