/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வீடுகள் விரிசல் ஏற்பட்ட பகுதி கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
/
வீடுகள் விரிசல் ஏற்பட்ட பகுதி கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
வீடுகள் விரிசல் ஏற்பட்ட பகுதி கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
வீடுகள் விரிசல் ஏற்பட்ட பகுதி கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
ADDED : ஜூலை 22, 2024 10:59 PM

கூடலுார்:கூடலுாரில் வீடுகள் விரிசல் ஏற்பட்ட பகுதியில், நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வெங்கடேஷ் ஆய்வு செய்தார்.
கூடலுார் பகுதியில், பருவமழை தீவிரமடைந்துள்ளது. மழையால், மேல்கூடலுார் கோக்கால் ஒன்றரை சென்ட் பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த பகுதியை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் மற்றும் நீலகிரி மாவட்ட கண்காணிப்பு குழு அலுவலர் வெங்கடேஷ் நேற்று ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, கோக்கால் பகுதி மக்கள், 'அரசு மருத்துவமனை கட்டடத்துக்கு மண் அகற்றப்பட்டதால், வீடுகள் விரிசல் ஏற்பட்டது,' என்றனர்.
அலுவலர் வெங்டேஷ் கூறுகையில், ''இப்பகுதியில் வீடுகள் விரிசல் ஏற்படத்தான் காரணம் குறித்து, புவியியல் துறை வல்லுநர்கள் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்குப் பின்பு விரிசலுக்கான காரணம் தெரிய வரும். அதன் அடிப்படையில் முடிவு செய்யப்படும்,'' என்றார். ஆய்வின்போது, கூடலூர் ஆர்.டி.ஓ. செந்தில்குமார் உட்பட பலர் இருந்தனர்.