/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொழிலாளர் நலத்துறையினர் ஆய்வு; முத்திரையிடாத தராசுகள் பறிமுதல்
/
தொழிலாளர் நலத்துறையினர் ஆய்வு; முத்திரையிடாத தராசுகள் பறிமுதல்
தொழிலாளர் நலத்துறையினர் ஆய்வு; முத்திரையிடாத தராசுகள் பறிமுதல்
தொழிலாளர் நலத்துறையினர் ஆய்வு; முத்திரையிடாத தராசுகள் பறிமுதல்
ADDED : ஆக 02, 2024 05:30 AM
குன்னுார் : குன்னுாரில் உள்ள தொழிலாளர் நல துறை சார்பில் நடந்த ஆய்வில் முத்திரையிடாத, 32 எடை இயந்திரங்கள் மற்றும் தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னை தொழிலாளர் ஆணையர், சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி ஆகியோர் உத்தரவின் பேரில், நீலகிரி மாவட்டத்தில் சட்டமுறை எடை அளவு சட்டத்தின் கீழ் காய்கறி,மீன் மற்றும் இறைச்சி விற்பனை கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில், நீலகிரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் தாமரை மனாளன் தலைமையில், ஊட்டி மார்க்கெட்டில் காய்கறிகள் மீன் மற்றும் இறைச்சி விற்பனை கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
134 கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில், 32 எடை இயந்திரங்கள் மற்றும் தராசுகள் முத்திரையிடாமல் வியாபாரத்துக்கு பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. இவற்றை பறிமுதல் செய்து உரிமையாளருக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், வியாபாரிகளிடம் உரிய முத்திரையை கட்டணத்தை செலுத்தி எடை இயந்திரங்கள் மற்றும் தராசுகளை பயன்படுத்த வியாபாரிகளுக்கு தொழிலாளர் நலத்துறையினர் அறிவுரை வழங்கினர். ஆய்வில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் சுபத்ரா, ஸ்ரீராம், அருண்குமார், காவல்துறை சார்பில் எஸ்.ஐ., சுரேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.