/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இன்று பணி ஓய்வு பெறும் நாள் : ஊட்டியில் இன்ஸ்பெக்டர் மரணம்
/
இன்று பணி ஓய்வு பெறும் நாள் : ஊட்டியில் இன்ஸ்பெக்டர் மரணம்
இன்று பணி ஓய்வு பெறும் நாள் : ஊட்டியில் இன்ஸ்பெக்டர் மரணம்
இன்று பணி ஓய்வு பெறும் நாள் : ஊட்டியில் இன்ஸ்பெக்டர் மரணம்
ADDED : மே 31, 2024 01:06 AM

ஊட்டி;ஊட்டியில் இன்று ஓய்வு பெற இருந்த இன்ஸ்பெக்டர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் போலீசார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனபால், 60, நீலகிரி மாவட்ட குற்றப்பதிவேடு ஆவண கூடத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம், ஊட்டி ஹில்பங்க் பகுதியில் டீ குடித்து கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஊட்டி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே, அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். உயர் ரத்த அழுத்தம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இன்று (31ம் தேதி) அவர் ஓய்வு பெற இருந்த நிலையில், திடீரென உயிரிழந்த சம்பவம் போலீசார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.