/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் அபாயகரமான மரங்கள் அகற்றும் பணி தீவிரம்; மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை அவசியம்

ADDED : ஆக 01, 2024 12:11 AM

ஊட்டி : ஊட்டியில் அபாயகரமாக உள்ள மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது.
ஊட்டி, குன்னுார், குந்தா, கோத்தகிரி, கூடலுார் மற்றும் பந்தலுார் தாலுக்காக்களில் நுாறாண்டு பழமை வாய்ந்த ஏராளமான கற்பூர மரங்கள் உள்ளன. குடியிருப்பு, பள்ளி, அரசு அலுவலகங்கள், சாலையோரங்களில் பெரிய அளவிலான கற்பூர மரங்கள் அபாயகரமாக உள்ளது.
பருவமழை சமயங்களில் பலத்த காற்றுக்கு மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், அரசு கட்டடங்கள், வீடுகள் சேதமாகி வருகிறது.
மூன்று வாரம் பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு மாவட்ட முழுவதும், 250க்கு மேற்பட்ட மரங்கள் விழுந்துள்ளது. மாவட்ட முழுவதும் பல இடங்களில் இன்னும் ஏராளமான அபாயகரமான மரங்கள் உள்ளன.
இது போன்ற அபாயகரமான மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சில பகுதிகளில் மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. ஊட்டியில் பூங்கா சாலை, தமிழக சாலை, பிங்கர்போஸ்ட் பகுதிகளில் அபாயகரமான மரங்கள் பவர்ஷா உதவியுடன் அகற்றப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் கூறுகையில், 'நீலகிரியை பொறுத்த வரை நுாறாண்டு பழமையான கற்பூரம் மரங்கள் தான் எங்கு பார்த்தாலும் அபாயகரமாக உள்ளது. இது போன்ற அன்னிய மரங்களை அகற்ற ஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் தரும் மனுக்களை உடனடியாக பரிசீலித்து அபாயகரமான மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.