/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வனவிலங்கு வேட்டை கைதானவரிடம் தீவிர விசாரணை
/
வனவிலங்கு வேட்டை கைதானவரிடம் தீவிர விசாரணை
ADDED : ஆக 29, 2024 10:06 PM

குன்னுார் : குன்னுாரில் வனத்துறையால் கைது செய்யப்பட்ட வரிடம் தீவிர விசாரணை நடந்தது.
குன்னுார் காட்டேரி பகுதியில் வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கடந்த, 25ம் தேதி சோதனை நடந்தது.
அப்போது, காரில் நாட்டு வெடிகுண்டு உட்பட வேட்டைக்கு பயன்படுத்தும் சுருக்கு கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில், வெலிங்டன் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன்,38, ராஜன்,41, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
'அதில், ராமகிருஷ்ணன் பல இடங்களிலும் வனவிலங்குகள் வேட்டைக்காக நாட்டு வெடி குண்டு வைத்துள்ளனர்,' என, தகவல் வெளியானது. வனத்துறை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதித்தது.
தொடர்ந்து, ஏ.சி.எப்., மணிமாறன், குன்னுார் ரேஞ்சர் ரவீந்திரநாத், தலைமையில், வனத்துறையினர், போலீசார், வருவாய் துறையினர் காட்டேரி கிளன்டேல் அருகே ஆற்றோர பகுதியில் மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஆற்றோர பகுதியில் செட் அடித்து, 6 வேட்டை நாய்கள் வைத்து வேட்டையாடுவது தெரியவந்தது.
வனத்துறையினர் கூறுகையில், 'வேட்டைக்கு பயன்படுத்தும் நாய்கள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும். நாட்டு வெடி குண்டு வைத்துள்ளது குறித்து விசாரணை நடந்து வருகிறது,' என்றனர்.
வருவாய் துறையினர் கூறுகையில், 'ஆய்வில் ஆற்றோர பகுதியை ஆக்கிரமிப்பு செய்து செட் அடிக்கப்பட்டுள்ளது குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும். மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அந்த செட் முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

