/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மஞ்சூர் கெத்தை வனப்பகுதியில் தீவிர கண்காணிப்பு
/
மஞ்சூர் கெத்தை வனப்பகுதியில் தீவிர கண்காணிப்பு
ADDED : செப் 05, 2024 08:37 PM

ஊட்டி:நீலகிரி மாவட்டத்தை ஒட்டிய கேரளா வனப்பகுதியில் நக்சல் நடமாட்டம் உள்ளதால், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், மஞ்சூர் கெத்தை பகுதி கேரள எல்லையில் உள்ளது. இங்குள்ள வனப்பகுதியில், நக்சல் நடமாட்டம் உள்ளதால், கேரள போலீசார் மற்றும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தமிழக போலீசார், அதிரடி படையினர் எல்லையோர வனப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளான அப்பர் பவானி, எமரால்டு, அவலாஞ்சி, கெத்தை உள்ளிட்ட இடங்களில் அணை மற்றும் மின் நிலையங்கள் உள்ளன. சமீப காலமாக மஞ்சூர்- கோவை சாலையில், முள்ளி சோதனை சாவடி வழியாக கேரளா உள்ளிட்ட பிற இடங்களில் இருந்து வரும் வாகனங்களில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சோதனை சாவடியில் கண்காணிப்பை பலப்படுத்தும் நோக்கில், கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, வனப்பகுதியில் ரோந்து பணிகள் நடந்து வருகிறது.
மஞ்சூர் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் கூறுகையில், ''மஞ்சூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நக்சல் நடமாட்டம் இல்லை. எனினும், கெத்தை சோதனை சாவடியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, வனப்பகுதிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு வரும் வாகனங்களும் சோதனையிடப்படுகின்றன,''என்றார்.