/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேர்தல் பறக்கும் படையினர் வாகனங்களில் தீவிர சோதனை
/
தேர்தல் பறக்கும் படையினர் வாகனங்களில் தீவிர சோதனை
ADDED : மார் 25, 2024 12:28 AM

ஊட்டி;கோத்தகிரி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
லோக்சபா தேர்தல், வரும் 19ல் துவங்கி, ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடக்கிறது.
அதில், அரசியல் கட்சியினரின் தலையீடு இல்லாமல், வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க, தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது. குன்னுார் தொகுதிக்கு உட்பட்ட, மக்கள் கூடும் பகுதிகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.
இதனால், பறக்கும் படை அலுவலர்கள், வீடியோ கவரேஜ் உடன், வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கோத்தகிரி, குன்னுார் மற்றும் ஊட்டி சாலையில் அமைந்துள்ள கட்டபெட்டு சந்திப்பில் எஸ்.எஸ்.டி. 3ஏ., பறக்கும் படையினர், குன்னுார் ஆர்.டி.ஓ., தலைமையில், தொடர்ந்து, வாகனங்களை பரிசோதித்து வருகின்றனர்.

