/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாயமான 2 புலிக்குட்டிகள் எங்கே என விசாரணை
/
மாயமான 2 புலிக்குட்டிகள் எங்கே என விசாரணை
ADDED : ஆக 22, 2024 02:16 AM
பந்தலுார்:நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே பிதர்காடு வனச்சரக எல்லைக்கு உட்பட்ட, 'சசக்ஸ்' என்ற தனியார் எஸ்டேட் பகுதியில், விஷத்தில் பலியான பன்றி இறைச்சியை உட்கொண்ட, இரண்டு புலிகள் பலியாகின.
ஒரே இடத்தில், இரண்டு புலிகள் மற்றும் காட்டுப்பன்றி விஷம் வைத்து கொல்லப்பட்டது, வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து, நேற்று பறக்கும் படை உதவி வன பாதுகாவலர் கிருபாகரன் தலைமையில், வனச்சரகர் ரவி, வனவர் ஜார்ஜ் பிரவீன்சன் உள்ளிட்ட வனக் குழுவினர், எஸ்டேட் நிர்வாகத்தினர் மற்றும் தொழிலாளர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், மாயமான இரண்டு புலி குட்டிகள் குறித்தும் கேள்விகள் கேட்டனர். இன்றும் விசாரணையை தொடர உள்ளனர்.