/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அணையை துார் வாரினால் மழை காலத்தில் பயன்
/
அணையை துார் வாரினால் மழை காலத்தில் பயன்
ADDED : மே 01, 2024 10:51 PM

குன்னுார் : 'குன்னுாரில் தொடரும் கடும் வறட்சியால் வறண்ட ரேலியா அணையை துார் வார வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுஉள்ளது.
குன்னுார் பகுதிகளில் இதுவரை இல்லாத அளவு வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், நகராட்சியில் உள்ள, 30 வார்டுகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும், 43.6 அடி உயரம் கொண்ட ரேலியா அணை வறண்டு, 6 அடிக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது.
இதனால், நகராட்சியின், 30 வார்டுகளிலும் குடிநீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எமரால்டு அணையும் வறண்டு வருவதால், கூட்டு குடிநீர் திட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு வழங்கப்பட்ட குடிநீர் தற்போது, 10 நாட்களுக்கு மேல் ஒரு நாள் மட்டும் வழங்கப்படுகிறது.
மக்கள் கூறுகையில், 'தற்போது வறண்டு காணப்படும் ரேலியா அணையை போர்க்கால அடிப்படையில் துார் வார வேண்டும். பருவ மழை பெய்வதற்கு முன்பு துார் வாரினால் அடுத்த ஆண்டுக்கான தண்ணீர் தேவை அதிகம் சேமிக்க வாய்ப்புள்ளது. நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும்,' என்றனர்.

