/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
லாஸ் நீர்வீழ்ச்சி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை மீறுவோருக்கு அபராதம் விதிக்க முடிவு

ADDED : மே 10, 2024 11:30 PM

குன்னுார்;குன்னுார் லாஸ் நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில கோடை சீசனையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுார் வழியாக ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகள் சாலை ஓரங்களில் உள்ள நீர்வீழ்ச்சி மற்றும் அருவிகளுக்கு சென்று நீரில் விளையாடி, 'செல்பி' மற்றும் போட்டோ எடுக்க ஆர்வம் காட்டுகின்றனர். அப்போது, நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் தவறி விழும் அபாயமும் உள்ளது.
இதனையொட்டி, நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
மேலும், லாஸ் நீர்வீழ்ச்சி அருகே யாரும் உள்ளே செல்லாத வகையில் எச்சரிக்கை அறிவிப்புடன் கயிறு கட்டி தடை ஏற்படுத்தி உள்ளனர்.
இந்தப் பகுதிகளில் தடையை மீறி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.