/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மசினி அம்மன் கோவிலில் 'ஜாத்திரெ' திருவிழா கோலாகலம்
/
மசினி அம்மன் கோவிலில் 'ஜாத்திரெ' திருவிழா கோலாகலம்
மசினி அம்மன் கோவிலில் 'ஜாத்திரெ' திருவிழா கோலாகலம்
மசினி அம்மன் கோவிலில் 'ஜாத்திரெ' திருவிழா கோலாகலம்
ADDED : மார் 09, 2025 10:57 PM

ஊட்டி; மசினகுடி ஸ்ரீ மசினி அம்மன் கோவிலில் 'ஜாத்திரெ' திருவிழா சிறப்பாக நடந்தது.
மசினகுடி ஸ்ரீ மசினி அம்மன் கோவிலில், தொதநாடு சீமை படுகர் நலச்சங்கம் சார்பில், ஆண்டு தோறும் 'ஜாத்திரெ' திருவிழா நடந்து வருகிறது.
நடப்பாண்டு திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. காலை, 6:00 மணிக்கு நடை திறப்பு விழாவும், தொடர்ந்து கூடலுார் தேவாலாவிலிருந்து தென்னம் பூ கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. மாலை முதல் இரவு வரை பாரம்பரிய ஆடல், பாடல் பஜனை நிகழ்ச்சிகள் நடந்தது.
நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு சோலுார் பூஜாரிகள் மசினகுடியில் இருந்து பொக்காபுரம் கோவிலுக்கு பூக்கள் எடுத்து சென்றனர். காலை, 10:00 மணிக்கு பொக்காபுரத்திலிருந்து மசினகுடிக்கு ஆடுகள் கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. காலை, 11:30 மணிக்கு சீமை பூஜை நடந்தது. திரளான படுகரின மக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.