/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரி பஸ்களில் 'எக்ஸ்பிரஸ்' முறைகேடு: ஐகோர்ட் உத்தரவை நிறைவேற்றுவதில் 'ஜவ்வு'
/
நீலகிரி பஸ்களில் 'எக்ஸ்பிரஸ்' முறைகேடு: ஐகோர்ட் உத்தரவை நிறைவேற்றுவதில் 'ஜவ்வு'
நீலகிரி பஸ்களில் 'எக்ஸ்பிரஸ்' முறைகேடு: ஐகோர்ட் உத்தரவை நிறைவேற்றுவதில் 'ஜவ்வு'
நீலகிரி பஸ்களில் 'எக்ஸ்பிரஸ்' முறைகேடு: ஐகோர்ட் உத்தரவை நிறைவேற்றுவதில் 'ஜவ்வு'
ADDED : ஏப் 27, 2024 12:32 AM
குன்னுார்;நீலகிரியில் முறைகேடாக வசூலிக்கப்படும் 'எக்ஸ்பிரஸ் கட்டணம்' தொடர்பாக நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டும், அதனை செயல்படுத்தவில்லை.
நீலகிரி மாவட்டத்தில், போக்குவரத்து கழகத்தின் கீழ், 349 பஸ்கள் இயங்கி வருகிறது. அதில், 'எக்ஸ்பிரஸ்' பெயரில், 175 பஸ்கள் இயக்கப்படுகிறது.
அதில், வட்டார போக்குவரத்து அலுவலக உத்தரவுக்கு எதிராக, இந்த பஸ்களில், 'எக்ஸ்பிரஸ்' பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 2018ல் அரசு பஸ் கட்டண உயர்வு அமல்படுத்தியது முதல் இந்த நடைமுறை இருந்து வருகிறது. இது தொடர்பாக, தன்னார்வ அமைப்பினர் பல்வேறு போராட்டங்கள் நடத்திய நிலையில் பலன் இல்லாததால், 2019ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்நிலையில், 'கடந்த பிப்., மாதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பஸ்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்,' என, ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவு இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை.
லஞ்சம் இல்லா நீலகிரி அமைப்பு நிர்வாகி ஆல்தொரை கூறுகையில், ''நீலகிரியில், அரசு போக்குவரத்து கழகம் மக்கள் மீது அதிக கட்டண சுமையை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண பஸ்களை எக்ஸ்பிரஸ் பெயரில் இயக்கி, முறைகேடாக கூடுதல் கட்டணம் வசூலித்து வருவது குறித்து தீர்வு காண ஐகோர்ட் உத்தரவிட்டும், இது வரை எந்த தீர்வும் காணப்படவில்லை.
வட்டார போக்குவரத்து அலுவலரும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார். உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், விரைவில் அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும்.
இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலர், அரசு போக்குவரத்து கழக கோவை மண்டல மேலாண்மை இயக்குனர், ஊட்டி கோட்ட பொது மேலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.

