/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப் :உயிர் தப்பிய இருவர்
/
பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப் :உயிர் தப்பிய இருவர்
ADDED : மார் 13, 2025 09:07 PM

கோத்தகிரி; கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்ததில், டிரைவர் உட்பட, இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து, கோத்தகிரிக்கு வழியாக, சோலுார்மட்டம் பகுதிக்கு நேற்று அதிகாலை ஜீப் சென்று கொண்டிருந்தது.
கடந்த இரு நாட்களாக, மழை பெய்த நிலையில், மழை நீர் தேங்கி சாலை ஒரம் ஈரமாக இருந்தால், குஞ்சப்பனை பகுதியில், மேகமூட்டமான காலநிலைகள், ஜீப் தடுப்பு சுவரை இடித்து கொண்டு, 15 அடி பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது.
இதில், டிரைவரும் அவருடன் பயணித்த மற்றொருவர் சிறு காயங்களுடன், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பிறகு, கிரேன் உதவியுடன், ஜீப் மீட்கப்பட்டது. இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.