/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாவட்டத்தின் பல பகுதிகளில் ஜெ., பிறந்த நாள் விழா கோலாகலம்
/
மாவட்டத்தின் பல பகுதிகளில் ஜெ., பிறந்த நாள் விழா கோலாகலம்
மாவட்டத்தின் பல பகுதிகளில் ஜெ., பிறந்த நாள் விழா கோலாகலம்
மாவட்டத்தின் பல பகுதிகளில் ஜெ., பிறந்த நாள் விழா கோலாகலம்
ADDED : பிப் 24, 2025 10:16 PM

குன்னுார்,; நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் ஜெ., பிறந்தநாள் விழா கோலாகலமாக நடந்தது.
குன்னுாரில் அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77 வது பிறந்த நாள் விழாவிற்கு மாவட்ட செயலாளர் வினோத் தலைமை வகித்தார். அரசு மருத்துவமனை பகுதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ஜெ., படத்துடன், செண்டை மேளம் முழங்க துவங்கிய ஊர்வலம், அண்ணா சிலை அருகே ஜெ.,அலங்கார மேடையை அடைந்தது. அங்கு, ஜெ., படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. 77 கிலோ கேக் வெட்டப்பட்டு, தொண்டர்களுக்கும், மக்களுக்கும் வழங்கப்பட்டது. விழாவில், மாநில இளைஞரணி இணை செயலாளர் பால நந்தகுமார், ஒன்றிய செயலாளர்கள் ஹேம்சந்த், ராஜூ உட்பட பலர் பங்கேற்றனர்.
* கோத்தகிரியில் நடந்த விழாவில் பேரூராட்சி செயலாளர் நஞ்சு சுப்ரமணி தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., சாந்திராமு, கொடி ஏற்றி, கேக் வெட்டி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார். பொதுக்குழு உறுப்பினர் மாதன், பேரவை செயலாளர் சுரேஷ், மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் விசு, உட்பட பலர் பங்கேற்றனர்.
* கோத்தகிரி பஸ் நிலையத்தில் நடந்த விழாவில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில், கிளை செயலாளர் ராஜேஷ் தலைமை வகித்தார். துணை செயலாளர் சந்திப், பொருளாளர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதே போல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஜெ., பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

