/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கபடி: ஆர்வத்துடன் பங்கேற்ற இளைஞர்கள் கூடலுார் கோழிப்பாலம் அணி சாம்பியன்

ADDED : பிப் 25, 2025 10:00 PM

பந்தலுார், ;பந்தலுார் அருகே சோலாடி பகுதியில் செயல்பட்டு வரும் 'வைட்ரோஸ்' மற்றும் ஏ.எம்.எஸ்., கபடி வளர்ச்சி குழு இணைந்து ஆண்டுதோறும் கபடி போட்டியை நடத்தி வருகிறது.
நடப்பாண்டிற்கான கபடி போட்டி கடந்த, 23 மற்றும் 24ம் தேதிகளில், சோலாடி மைதானத்தில் நடந்தது. செயலாளர் நைஜில் வரவேற்றார்.குழுவின் தலைவர்கள் நடராஜ் மற்றும் சுரேஷ் தலைமை வகித்தனர். ராஜேஸ், மோகன்தாஸ் முன்னிலை வகித்தனர்.
இரண்டு நாட்கள் நடந்த போட்டியில், நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 34 கபடி அணிகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று ஆர்வத்துடன் விளையாடினர்.
இதன் இறுதி போட்டியில் கூடலுார் கோழிப்பாலம் அணி முதல் பரிசு; ஆரூட்டுபாறை அணி, 2-ம் பரிசு; சேரம்பாடி என்.கே., பிரதர்ஸ் 3-ம் பரிசு; வைட் ரோஸ் பி அணி 4-ம் பரிசு பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுக்கோப்பை மற்றும் பண முடிப்புகள் வழங்கப்பட்டது.
மேலும் சிறந்த அணி, சிறந்த ரைடர், சுற்றாளர், கேட்ச்சர் ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
போட்டிக்கான ஏற்பாடுகளை கபடி வளர்ச்சி குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.