/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காமாட்சிபுரம் அரசு பள்ளியில் மேலாண்மை குழு தேர்வு
/
காமாட்சிபுரம் அரசு பள்ளியில் மேலாண்மை குழு தேர்வு
ADDED : செப் 04, 2024 12:56 AM

சூலுார்:காமாட்சி புரம் அரசு நடுநிலைப் பள்ளியில், புதிய மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், அரசு திட்டங்களை கண்காணித்து செயல்படுத்தவும் பள்ளி மேலாண்மை குழுக்கள் அமைக்கப்படுகின்றன. தற்போது, துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் குழுக்கள் மறு கட்டமைப்பு செய்யப்பட்டு வருகின்றன.
சூலுார் வட்டாரத்துக்கு உட்பட்ட காமாட்சிபுரம் நடுநிலைப்பள்ளியில், 24 புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பெற்றோர், ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வியாளர்கள், முன்னாள் மாணவர்கள் உள்ளடக்கிய, 24 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, மாவட்ட உதவி திட்ட அலுவலர் இளமுருகன், சூலூர் வட்டார கல்வி அலுவலர் தமிழ்செல்வி, இருகூர் பேரூராட்சி துணைத்தலைவர் ஜெயக்குமார், கவுன்சிலர் முருகசாமி பங்கேற்றனர்.
பள்ளி மேலாண்மை குழுவின் முக்கியத்துவம் குறித்து தலைமையாசிரியர் கீதாஞ்சலி விளக்கினார். தேர்வு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆசிரியை ராஜலட்சுமி நன்றி தெரிவித்தார்.