/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காமராஜர் பிறந்த நாள் விழா மாணவர்களுக்கு போட்டி
/
காமராஜர் பிறந்த நாள் விழா மாணவர்களுக்கு போட்டி
ADDED : ஜூலை 16, 2024 11:05 PM
பந்தலுார்;பந்தலுார் சுற்றுப்புற பகுதிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
பந்தலுார் அருகே பொன்னுார் அரசு உயர்நிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியர் கலைவாணி தலைமையில், மாணவர்களுக்கு பேச்சு,கவிதை,ஓவியம்,கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர் மகேஸ்வரி, மேலாண்மை குழு தலைவர் ரகு மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.
* நெல்லியாளம் நகர காங்., கட்சி சார்பில், கட்சி அலுவலகத்தில் நகர தலைவர் ஷாஜி தலைமையில் காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்து கேக் வெட்டினர். தொடர்ந்து கீழ்நாடுகாணி அரசு தொடக்கப்பள்ளியில், குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி கல்வி உபகரண பொருட்கள் வழங்கினர்.
* பாட்டவயல் பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பந்தலுார் வட்டார தலைவர் ரவி தலைமை வகித்தார். விஷ்ணுஜித் அனைவரையும் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் அஷ்ரப், மாவட்ட துணை தலைவர் குஞ்சாப்பி, நிர்வாகிகள் அஷ்ரப், ரியாகோஸ், ஆசிஸ், ஜோபி, அம்சா குட்டி ராஜன் உள்ளிட்ட கலர் பங்கேற்றனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. சுகுமாரா நன்றி கூறினார்.