/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முழு கொள்ளளவை எட்டிய காமராஜர் சாகர் அணை கோடை காலத்தில் நிம்மதி
/
முழு கொள்ளளவை எட்டிய காமராஜர் சாகர் அணை கோடை காலத்தில் நிம்மதி
முழு கொள்ளளவை எட்டிய காமராஜர் சாகர் அணை கோடை காலத்தில் நிம்மதி
முழு கொள்ளளவை எட்டிய காமராஜர் சாகர் அணை கோடை காலத்தில் நிம்மதி
ADDED : செப் 08, 2024 10:32 PM
ஊட்டி:ஊட்டி அருகே காமராஜர் சாகர் அணை முழு கொள்ளளவை எட்டியதால், கோடை காலத்தில் வன விலங்குகளுக்கு குடிநீர் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை.
ஊட்டி - கூடலுார் சாலையில் காமராஜர்சாகர் அணை உள்ளது. இங்குள்ள நீரோடைகளிலிருந்து வரும் தண்ணீர் காமராஜர் சாகர் அணையில் சேகரமாகிறது. தென் மேற்கு பருவ மழையின் போது, தற்போது, நீர் வரத்து அதிகப்பால் அணையின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து முழு கொள்ளளவை எட்டியது. இங்கு சேமிக்கப்படும் தண்ணீர் மரவக்கண்டி, சிங்காரா மற்றும் மாயார் ஆகிய மின் நிலையங்களில் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.
தவிர, கோடை காலங்களில் முதுமலை வனப்பகுதிகளில் உள்ள வன விலங்குகளின் தாகத்தை தீர்க்க இந்த அணையிலிருந்து அவ்வப்போது நீர் திறக்கப்படுகிறது. தற்போது, அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணையை நம்பியுள்ள மின் நிலையங்களில் மின் உற்பத்தி தடையின்றி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோடை காலத்தில் வன விலங்குகளுக்கான தண்ணீர் பிரச்னை நீங்கியதால் வனத்துறையினரும் நிம்மதி அடைந்துள்ளனர்.