/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காரக்கொரை- - ஒசஹட்டிக்கு சாலை வேண்டும்
/
காரக்கொரை- - ஒசஹட்டிக்கு சாலை வேண்டும்
ADDED : ஜூன் 12, 2024 09:54 PM
ஊட்டி,- 'காரக்கொரை முதல் ஒசஹட்டி வரை சாலை அமைத்து தர வேண்டும்,' என, கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கிராம மக்கள் அளித்துள்ள மனு:
ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட காரக்கொரை, ஒசஹட்டி, பாலாஜி நகர் உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக காரக்கொரை முதல் ஒசஹட்டி வரையுள்ள ஒற்றையடி பாதையை பயன்படுத்தி வருகிறோம். இப்பாதையை தான் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அவசர தேவைக்கு கர்ப்பிணி தாய்மார்களை இப்பாதையில் தான் அழைத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. தவிர இறந்தவர்களின் உடலையும் இப்பாதையில்தான் கடும் சிரமத்திற்கு இடையே கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
மக்கள் பயன்படுத்தும் இச்சாலையை தார் சாலையாக மாற்றி தரக் கோரி ஜெகதளா பேரூராட்சிக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. சாலை வசதி ஏற்படுத்தி தர தாங்கள் ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.