ADDED : செப் 12, 2024 08:32 PM
பந்தலுார் : பந்தலுார் அருகே அய்யன்கொல்லி பகுதியில் காட்டுநாயக்கர் சமுதாய வருடாந்திர கூட்டம் நடந்தது.
சந்திரன் தலைமை வகித்தார். அதில், பங்கேற்ற பழங்குடியின மக்கள் கூறுகையில், 'பழங்குடியினரின் சமுதாய அடிப்படை பிரச்னைகளை தீர்ப்பதற்கு அரசு முன்வர வேண்டும்; வீடு, குடிநீர், சாலை மற்றும் மின்சார வசதி, படித்த பழங்குடியின இளைஞர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
பழங்குடியினருக்கு மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்யும் நிதியில் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
பழங்குடியின கிராமங்களை புறக்கணிக்கும், அரசுத்துறை அதிகாரிகள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
இவை தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், 68 கிராமங்களை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தேவயானி நன்றி கூறினார்.