/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கேரளா மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் தர மறுப்பு: கூடலுாரில் தோட்ட தொழிலாளர்கள் அதிருப்தி
/
கேரளா மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் தர மறுப்பு: கூடலுாரில் தோட்ட தொழிலாளர்கள் அதிருப்தி
கேரளா மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் தர மறுப்பு: கூடலுாரில் தோட்ட தொழிலாளர்கள் அதிருப்தி
கேரளா மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் தர மறுப்பு: கூடலுாரில் தோட்ட தொழிலாளர்கள் அதிருப்தி
ADDED : மார் 07, 2025 08:32 PM

பந்தலுார்:
பந்தலுார் அருகே நெலாக்கோட்டை தனியார் எஸ்டேட், காவலராக பணியாற்றிய பன்னீர்செல்வம் என்பவரை நேற்று முன்தினம் காலை, காட்டெருமை தாக்கியதில் பலத்த காயமடைந்தார்.
நெலாக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்ற போது, அவர்கள் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர். 108 ஆம்புலன்சில், கூடலுார் அரசு மருத்துவமனை, கொண்டுச் சென்று அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், மருத்துவமனை நிர்வாகம், ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அவரை பரிந்துரை செய்தனர்.
ஆனால், கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் உள்ள, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக உறவினர்கள் தெரிவித்தனர். அப்போது, 'கேரளா மாநிலம் செல்வதற்கு ஆம்புலன்ஸ் வழங்க இயலாது; வீல் சேர் வழங்க முடியாது,' என, தெரிவித்து, பலத்த காயம் அடைந்தவரை நடக்க வைத்தனர். தொடர்ந்து, எஸ்டேட் ஆம்புலன்ஸ் வரவழைத்து அதில் அனுப்பி வைத்தனர்.
தோட்ட தொழிலாளர்கள் கூறுகையில், 'பந்தலுார் மற்றும் கூடலுார் பகுதிகளில் வனவிலங்குகளால் காயம் அடைந்தால், அவர்களை, கேரளா மாநில தனியார் மருத்துவமனைகளுக்கு, 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைப்பது வழக்கம்.
ஆனால், நேற்று முன்தினம் கூடலுார் அரசு மருத்துவமனை நிர்வாகிகள் காயங்களுடன் அவதிப்பட்டவரை மருத்துவமனை கொண்டு செல்ல, மறுத்து மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு புகார் அனுப்பி உள்ளோம்,' என்றனர்.
கூடலுார் ஆர்.டி.ஓ., செந்தில்குமார் கூறுகையில்,'' இந்த தகவல் குறித்து மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.