/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கேரள மா.கம்யூ., மூத்த தலைவர் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கம்
/
கேரள மா.கம்யூ., மூத்த தலைவர் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கம்
கேரள மா.கம்யூ., மூத்த தலைவர் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கம்
கேரள மா.கம்யூ., மூத்த தலைவர் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கம்
ADDED : ஆக 20, 2024 02:08 AM

பாலக்காடு;மா.கம்யூ., கட்சியின் மூத்த தலைவரும், கேரள சுற்றுலாத் துறை கழகத் தலைவருமான சசி, முறைகேடு செய்ததால், அவரை அனைத்து பதவிகளில் இருந்து நீக்கி கட்சி கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.
பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு பகுதியை சேர்ந்த சசி, அப்பகுதியில் கட்சியின் அலுவலக கட்டுமான பணிக்கான நிதியில் முறைகேடு செய்துள்ளதாகவும், கூட்டுறவு கல்வி சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 'யுனிவர்சல்' கல்லுாரிக்கு வசூலித்த நிதியை துஷ்பிரயோகம் செய்ததாகவும் புகார் எழுந்தது.
இந்தப் புகாரை விசாரிக்க கட்சி ஒரு குழு அமைத்தது. இந்தக் குழு நடத்திய விசாரணையில், கட்சி அலுவலக கட்டுமானத்தில் முறைகேடு செய்ததும், கல்லுாரிக்காக, கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் இருந்து, 5.49 கோடி ரூபாய் பங்குகள் அவரது பெயருக்கு மாற்றியுள்ளார். மேலும், அவருக்கு வேண்டியவர்களை கூட்டுறவு வங்கியில் நியமித்து உள்ளதும் தெரியவந்தது.
இந்த விசாரணை அறிக்கை, கட்சியின் மாநிலச் செயலாளர் கோவிந்தன் தலைமையில் நடந்த கூட்டத்தில் பரிசீலனை செய்யப்பட்டது.
அதன்பின், சசியை கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டதோடு, மண்ணார்க்காடு பகுதி கமிட்டியை முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
'கட்சி நடவடிக்கைக்கு உள்ளான சசி, மாநில சுற்றுலா துறை கழக தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வார்,' என, தெரிகிறது. இவர், கடந்த, 2019ல் நடந்த சட்டசபை தேர்தலில் கட்சிக்கு ஒத்துழைக்கவில்லை.
கட்சியின் இளைஞர் அணியை சேர்ந்த பெண் அளித்த பாலியல் புகார்களால் கட்சி நடவடிக்கைக்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

