/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கழிவு நீர் தேங்கினால் கடும் நடவடிக்கை :கேரள மாநில சுகாதாரத்துறை நோட்டீஸ்
/
கழிவு நீர் தேங்கினால் கடும் நடவடிக்கை :கேரள மாநில சுகாதாரத்துறை நோட்டீஸ்
கழிவு நீர் தேங்கினால் கடும் நடவடிக்கை :கேரள மாநில சுகாதாரத்துறை நோட்டீஸ்
கழிவு நீர் தேங்கினால் கடும் நடவடிக்கை :கேரள மாநில சுகாதாரத்துறை நோட்டீஸ்
ADDED : மே 16, 2024 11:54 PM
பாலக்காடு;பாலக்காடு சுற்றுப்பகுதியில், டெங்கு காய்ச்சல் உட்பட நோய்கள் பரவுவதை கட்டுப்படுத்த, சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கேரள மாநிலம், பொது சுகாதார சட்டப்படி, சுகாதார துறையினர் பாலக்காடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் அதிகரிக்க வாய்ப்புள்ள சூழ்நிலையை மதிப்பிட்டு, கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கொழிஞ்சாம்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சோதனை நடந்தது. அப்போது, ஆலம்பாடி பகுதியில் சாலை மற்றும் ஓடையில் கழிவுநீர் தேங்குவது கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள, 10 வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், டயரில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாக வழிவகுத்ததை கண்டுபிடித்து, பொள்ளாச்சி ரோட்டில் உள்ள அப்பல்லோ டயர் ஏஜென்சி மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
சுகாதாரத் துறை அதிகாரி சுரேஷ் கூறியதாவது:
பொது இடத்தில், கழிவு நீரை அலட்சியமாக தேங்க விட்டால், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் சுமத்தப்படும். கொழிஞ்சாம்பாறை ஊராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் கழிவு நீர் தேங்கியுள்ளது.
இது, பொது மக்களுக்கு சுகாதார பிரச்னையை ஏற்படுத்தும்.
'குறிப்பிட்ட நேரத்திற்குள் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் சோதனை தீவிரப்படுத்தப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

