/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிறுமுகையில் 39 கி.மீ., தூரம் தீ தடுப்பு கோடுகள் அமைப்பு
/
சிறுமுகையில் 39 கி.மீ., தூரம் தீ தடுப்பு கோடுகள் அமைப்பு
சிறுமுகையில் 39 கி.மீ., தூரம் தீ தடுப்பு கோடுகள் அமைப்பு
சிறுமுகையில் 39 கி.மீ., தூரம் தீ தடுப்பு கோடுகள் அமைப்பு
ADDED : மார் 13, 2024 10:14 PM
மேட்டுப்பாளையம் : வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படாமல் இருக்கும் வகையில், சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் 39 கி.மீ., தூரம் தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளதாக சிறுமுகை வனத்துறையினர் தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகம் மிகவும் அடர்ந்த வனப்பகுதியாக கருத்தப்படுகிறது. 11 ஆயிரம் ஹெக்டேர் வனப்பரப்பை கொண்டதாக உள்ளது. யானை, மான், காட்டெருமை, புலி, சிறுத்தை, முதலை என பல்வேறு வகையான வனவிலங்குகள் நடமாடுகின்றன.
பவானிசாகர் அணையின் நீர்தேக்க பகுதி சிறுமுகை வனப்பகுதியில் அமைந்துள்ளது. சிறுமுகை, லிங்காபுரம், பெத்திக்குட்டை, கூத்தாமண்டி, மூலையூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள், காட்டெருமை, காட்டு பன்றி போன்ற வனவிலிங்குகளின் நடமாட்டம் அதிகம் காணப்படும்.
தற்போது கோடை காலம் நெருங்கி வரும் நிலையில், வனப்பகுதிகளில் உள்ள மரங்களின் இலைகள் காய்ந்து கீழே விழுகின்றன. குட்டைகள், ஓடைகள் போன்றவைகளிலும் தண்ணீர் குறைந்து வறண்டு வருகிறது. இதனால், சிறுமுகை வனப்பகுதியில் தீ விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது. இதனை தடுக்க கோவை மாவட்டத்தில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் முழுவீச்சில ஈடுபட்டு உள்ளனர்.
இதுகுறித்து சிறுமுகை வனச்சரகர் மனோஜ் கூறுகையில், வெயில் காரணமாக வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 39 கி.மீ., தூரம் வரை தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
வனப்பகுதியோரம் வசிக்கும் மக்கள், தீ விபத்து ஏற்படும் வகையில், குப்பைகளுக்கு, செடிகளுக்கு தீ வைப்பது கூடாது. திறந்தவெளியில் சமைக்கக் கூடாது. வனப்பகுதியில் யாராவது சிகரெட் பிடித்தால் அவர்களை அறிவுறுத்த வேண்டும், என்றார்.

