/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இருளில் மூழ்கும் கொளப்பள்ளி; அவதிப்படும் மக்கள்
/
இருளில் மூழ்கும் கொளப்பள்ளி; அவதிப்படும் மக்கள்
ADDED : ஜூலை 31, 2024 11:55 PM
பந்தலுார் : பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொளப்பள்ளி பஜார் அமைந்துள்ளது. இங்கு, 250க்கும் மேற்பட்ட கடைகள்; குடியிருப்புகள் அமைந்துள்ளது.
இதனைக் ஒட்டி டான்டீ தேயிலை தோட்டம் அமைந்துள்ள நிலையில், சிறுத்தை, கரடி மற்றும் யானைகள் இரவில் இந்த பகுதிக்கு அதிக அளவில் வந்து செல்கின்றன.
கடந்த மாதம் இந்த பகுதியில் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனங்களை, யானை சேதப்படுத்தியது. இத்தகைய பகுதியில் உள்ளமின்கம்பங்களில், தெருவிளக்குகள் பழுதடைந்து பல மாதங்கள் கடந்தும்,அதனை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் முன் வரவில்லை.
இதனால், இரவு நேரங்களில் இந்த பகுதிக்கு வனவிலங்குகள் வருவது குறித்து, மக்களுக்கு தெரியாத நிலையில் ஆபத்தில் சிக்கும் சூழல் தொடர்கிறது. எனவே, ஊராட்சி நிர்வாகம் இங்கு தரமான தெருவிளக்குகளை பொருத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.