/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோத்தகிரி சுண்டட்டி பகுதி தொடரும் யானை நடமாட்டம்
/
கோத்தகிரி சுண்டட்டி பகுதி தொடரும் யானை நடமாட்டம்
ADDED : ஏப் 18, 2024 11:29 PM
கோத்தகிரி:நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் மட்டும், யானைகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. சமீப காலமாக கிராமப்புற குடியிருப்புகளை ஒட்டி, யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கோடை வறட்சியின் காரணமாக, வனப்பகுதியில் உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால், யானைகள் வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து, கிராமப்புற பகுதிகளுக்கு வருவது வழக்கமாகிவிட்டது.
கிராம குடியிருப்புகளை ஒட்டி, கேரட், பீட்ரூட், முள்ளங்கி மற்றும் முட்டைகோஸ் உள்ளிட்ட, மலைக் காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது. உணவுக்காக, கூட்டமாக வரும் யானைகள், காய்கறி தோட்டங்களுக்குள் புகுந்து, பயிர்களை சேதம் விளைவித்து வருகின்றன.
தொடர் நடமாட்டத்தால், விவசாயிகள் தோட்டப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் அச்சம் அடைந்துள்ளனர். எனவே, வனத்துறையினர் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டியது அவசியம்.

