/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோத்தகிரி வக்கீல் சங்க நிர்வாகிகள் தேர்வு
/
கோத்தகிரி வக்கீல் சங்க நிர்வாகிகள் தேர்வு
ADDED : மே 05, 2024 11:28 PM
கோத்தகிரி;கோத்தகிரியில், 2024-25 ம் ஆண்டுக்கான, வக்கீல் சங்க நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
இதில், தலைவராக பாலசுப்ரமணி, துணைத் தலைவராக ரவி, செயலாளராக கோபிநாத், பொருளாளராக முருகன், இணை செயலாளராக கவிதா ஆகியோருடன், செயற்குழு உறுப்பினர்களாக, மணிக்குமார், மாதன், மோகன், ராதாகிருஷ்ணன், நஞ்சன் மற்றும் உதயகுமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தொடர்ந்து நடந்த கூட்டத்தில், 'கோத்தகிரி கோர்ட் இடம் நெருக்கடியில் இயங்கி வருகிறது. இதனால், வக்கீல்கள், வழக்காளிகள் இடையூறுகளை சந்தித்து வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு, தேர்வு செய்யப்பட்ட இடத்தில் புதிய கோர்ட் கட்டப்பட வேண்டும்,' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், கோத்தகிரி வக்கீல்கள் பலர் பங்கேற்றனர்.