/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோத்தகிரி பள்ளி மாணவர்கள் தேசிய தடகள போட்டிக்கு தேர்வு
/
கோத்தகிரி பள்ளி மாணவர்கள் தேசிய தடகள போட்டிக்கு தேர்வு
கோத்தகிரி பள்ளி மாணவர்கள் தேசிய தடகள போட்டிக்கு தேர்வு
கோத்தகிரி பள்ளி மாணவர்கள் தேசிய தடகள போட்டிக்கு தேர்வு
ADDED : ஆக 06, 2024 09:47 PM
கோத்தகிரி : கோத்தகிரி ஜூட்ஸ் பள்ளி மாணவர்கள் மண்டல தடகள போட்டியில் சாதித்து, தேசிய போட்டிக்கு தகுதி பெற்றனர்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், பள்ளிகளுக்கு இடையேயான, மண்டல தடகள போட்டி நடந்தது. தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலங்களை சேர்ந்த, 68 பள்ளிகளில் இருந்து, 1,500 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
'சப்-ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர்,' என, மூன்று பிரிவுகளில் நடந்த போட்டியில், கோத்தகிரி ஜூட்ஸ் பள்ளி மாணவர்கள், மொத்தம், 248 புள்ளிகளை பெற்று, முதலிடம் பெற்றனர்.
பதக்கங்களின் அடிப்படையில், 7 தங்கம், 18 வெள்ளி, 10 வெண்கலம் பதக்கங்களை பெற்று, தேசிய போட்டிக்கு தகுதி பெற்றனர்.