/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோத்தகிரி சல்லிவன் நினைவு பூங்கா பணிகள் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு
/
கோத்தகிரி சல்லிவன் நினைவு பூங்கா பணிகள் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு
கோத்தகிரி சல்லிவன் நினைவு பூங்கா பணிகள் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு
கோத்தகிரி சல்லிவன் நினைவு பூங்கா பணிகள் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு
ADDED : ஆக 09, 2024 01:46 AM

கோத்தகிரி;கோத்தகிரி சல்லிவன் நினைவு பூங்காவை, சுற்றுலாத்துறை அமைச்சர் நேற்று ஆய்வு செய்தார்.
கோத்தகிரி கன்னேரிமுக்கு பகுதியில், ஜான் சல்லிவன் நினைவகம், நீலகிரி ஆவண காப்பகமாக அமைந்துள்ளது. நினைவகம் அருகே, வருவாய் துறைக்கு சொந்தமான, 10 ஏக்கர் நிலத்தில் சல்லிவன் நினைவு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, 2019ம் ஆண்டு முதல் பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதுவரை, எஸ்.ஏ.டி.பி., திட்டத்தில், 88 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, அதில், 68 லட்சம் ரூபாய் செலவில், பேரூராட்சி நிர்வாகம், ஆரம்பக்கட்ட பணிகளை மேற்கொண்டது.
தோட்டக்கலை துறைக்கு பூங்கா ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, 20 லட்சம் ரூபாய் செலவில், மலர் நாற்றுகள் நடவுப்பணி, புல்தரை அமைக்கும் பணி மற்றும் அலங்கார பணிகள் நிறைவடைந்து, பூங்கா விரைவில் திறக்கப்பட உள்ளது.
இந்நிலையில், சுற்றலுத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று பூங்காவை ஆய்வு செய்து, நிருபர்களிடம் கூறுகையில், ''ஊட்டி -200 நிகழ்ச்சி மற்றும் சல்லிவன் பூங்காவுக்காக, முதலமைச்சர், 20 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். இந்த பூங்கா, 10 ஏக்கர் பரப்பளவு கொண்டது. விரைவில் பிரசித்தி பெற்ற பூங்காவாக மாறும். தோட்டக்கலைத்துறை மேம்படுத்தி வரும் இப்பூங்கா, எதிர்காலத்தில், அதிக சுற்றுலா பயணிகள் வந்து செல்ல உகந்த இடமாக மாறும். துறை அதிகாரிகளிடம் பேசி, பூங்கா திறப்பு நாள் விரைவில் அறிவிக்கப்படும்,'' என்றார்.
தொடர்ந்து, அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தார். பேரூராட்சி செயல் அலுவலர் இப்ராஹிம், தலைவர் ஜெயக்குமாரி, துணைத் தலைவர் உமாநாத், தாசில்தார் கோமதி, தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.