/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோதண்டராமர் திருக்கோவில் விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு
/
கோதண்டராமர் திருக்கோவில் விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு
கோதண்டராமர் திருக்கோவில் விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு
கோதண்டராமர் திருக்கோவில் விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு
ADDED : ஏப் 22, 2024 11:09 PM
கோத்தகிரி;கோத்தகிரி அருகே உள்ள பெட்டட்டி ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோவில் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கடந்த, 21ம் தேதி அதிகாலை, 4:00 மணி முதல், 5:00 மணி வரை கும்பாபிஷேகமும், தொடர்ந்து, 7:00 மணி வரை அலங்காரம் மற்றும் ஊர் பூஜை நடந்தது.
காலை, 10:00 மணி முதல், பகல் 1:00 மணி வரை பஜனையும், தொடர்ந்து, 3:00 மணிவரை அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை 6:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரை, ஸ்ரீ ராமபிரான், லட்சுமணர் மற்றும் சீதா பிராட்டியார் திருவீதி உலா நடந்தது. கிராம வீதிகளில் உலா வந்த வீதி உலா வை, பக்தர்கள் வழிப்பட்டனர்.
இரவு, 10:00 மணிக்கு, 'தருமத தாரி' என்ற படுக சமுதாய நாடகம் நடந்தது. 22ம் தேதி, காலை, 7:00 மணிமுதல் 12:00 மணிவரை பட்டாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 4:00 மணிவரை, அனுமார் வாகன திருவீதி உலா நடந்தது.
மாலை, 4:00 மணிக்கு, மக்கள் ஆராதனையும், விழா நிறைவடைந்தது. விழா ஏற்பாடுகளை, ஊர் மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.