/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மீட்பு பணிக்காக வயநாடுக்கு விரைந்த கூடலுார் வனத்துறை
/
மீட்பு பணிக்காக வயநாடுக்கு விரைந்த கூடலுார் வனத்துறை
மீட்பு பணிக்காக வயநாடுக்கு விரைந்த கூடலுார் வனத்துறை
மீட்பு பணிக்காக வயநாடுக்கு விரைந்த கூடலுார் வனத்துறை
ADDED : ஆக 03, 2024 10:19 PM

கூடலுார்:கேரளா மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காணாமல் போனவர்களை தேடும் பணியில் தொடர்ந்து மீட்பு படையினர், தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இந்நிலையில், நீலகிரி மாவட்டம், கூடலுார் மற்றும் ஓசூர் வனத்துறை சார்பில், நேற்று, மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் கூடலுார் ஜீன்பூல் தாவர மையத்திலிருந்து கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ்பிரபு தலைமையில், பயிற்சி வன அலுவலர் அரவிந்த், உதவி வன பாதுகாவலர் கருப்பையா மற்றும் வன ஊழியர்கள் நிவாரண பொருட்களை வயநாடு பகுதிக்கு வாகனத்தில் அனுப்பி வைத்தனர்.
கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறுகையில், ''வனத்துறை சார்பில் கோவை உள்ளிட்ட பிற வனக் கோட்டங்களில் இருந்தும், நிவாரண பொருட்கள் சேகரித்து அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம்,'' என்றார்.