sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பவானீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

/

பவானீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பவானீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பவானீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்


ADDED : செப் 17, 2024 05:32 AM

Google News

ADDED : செப் 17, 2024 05:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: ஊட்டி அருகே பவானீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

ஊட்டி அருகேயுள்ள பெர்ன்ஹில் பகுதியில் பவானீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகா கும்பாபிஷேக விழா ஒட்டி கடந்த, 14ம் தேதி காலை 8:30 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது.

நேற்று முன்தினம் இரண்டாம் கால யாக பூஜை, ருத்ர ஹோமம், திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை, கோபுர கலசங்களை வைத்தல், அஷ்டபந்தன நிகழ்ச்சியும், மாலை, 6:30 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை நடந்தது.

நேற்று காலை நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், கலசங்கங்கள் புறப்பாடு நடந்தது. இதை தொடர்ந்து, மஹா கும்பாபிஷேகம் காலை, 9:45 மணிக்கு தொடங்கியது. ராஜகோபுரம் மற்றும் விமான கலசங்களில் கும்பாபிஷேகம் நடந்தது.

அப்போது கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு பொதுமக்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

இதன் பின்னர், 10:45 மணிக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், பகல் 12:00 மணிக்கு அன்னதான நிகழ்ச்சி நடந்தது. மாலை 4:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடந்தது.






      Dinamalar
      Follow us