/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சக்தி மகா முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் பரவசம்
/
சக்தி மகா முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் பரவசம்
சக்தி மகா முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் பரவசம்
சக்தி மகா முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் பரவசம்
ADDED : மார் 11, 2025 05:47 AM

குன்னுார் : குன்னுார் ரயில்வே காலனியில் உள்ள சக்தி மகா முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
குன்னுார் ரயில்வே காலனியில் உள்ள சக்தி மகா முனீஸ்வரர் கோவிலில், விநாயகர், காட்டேரி அம்மன், துர்கையம்மன், தேவி கருமாரியம்மன், மகா காளியம்மன் சிலைகள் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டன.
கும்பாபிேஷக விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, பூர்ணாகுதி, மவுண்ட் பிளசன்ட் வரசக்தி விநாயகர் கோவிலில் இருந்து, தீர்த்த குட புறப்பாடு அன்னதானம், முதல் காலயாக பூஜை, பரிவார தெய்வங்களுக்கு ஹோமம், நாடி சந்தானம், பிராண பிரதிஷ்டை, மகா பூர்ணாகுதி நடந்தன.
நேற்று காலை, 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மந்திர ஹோமம், பரிவார தெய்வங்களுக்கு மூல மந்திரம், காலை 9:15 மணிக்கு கடம், விமான கலச புறப்பாடு நடந்தது. 10:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
கோவில் பணியில், சுயம்புவாக கிடைத்த அம்மன் கல் கோவிலில் வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
சந்திரா காலனி, முத்தாலம்மன் கோவில், மவுன்ட் பிளசன்ட் பத்ரகாளியம்மன் கோவில், விநாயகர் கோவில் வழியாக சுவாமி ஊர்வலம் நடந்தது. கோவிலில், புதிதாக அமைக்கப்பட்ட காளி சிலையை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேக சர்வ சாதகங்களை, மவுன்ட் பிளசன்ட் பாலசுப்ரமணியம், அருவங்காடு மகேஷ் சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர் செய்தனர். ஏற்பாடுகளை பூசாரி செந்தில் குமார் தலைமையில், கோவில் கமிட்டியினர், ஊர் மக்கள் செய்தனர்.

