/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார் மேரிஸ் பள்ளி முன்னாள் மாணவியர் சந்திப்பு
/
குன்னுார் மேரிஸ் பள்ளி முன்னாள் மாணவியர் சந்திப்பு
குன்னுார் மேரிஸ் பள்ளி முன்னாள் மாணவியர் சந்திப்பு
குன்னுார் மேரிஸ் பள்ளி முன்னாள் மாணவியர் சந்திப்பு
ADDED : மே 16, 2024 06:07 AM

குன்னுார் : குன்னுார் மேரிஸ் மேல்நிலை பள்ளியில் முன்னாள் மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
குன்னுார் புனித மேரிஸ் மேல்நிலைப் பள்ளியில் கடந்த, 1984ம் ஆண்டு முதல் பயின்று வந்த முன்னாள் மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பள்ளியின் முன்னாள் மாணவியாக இருந்து தற்போது கோவை கலெக்டர் அலுவலகத்தில், துணை கலெக்டராக பணியாற்றி வரும் மணிமேகலை, சாந்தி விஜய் பள்ளி முன்னாள் தலைமையாசிரியை ஸ்டெல்லா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
தற்போதைய மாணவியர் இவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். வகுப்புகளுக்கு சென்ற முன்னால் மாணவியர் அங்க அமர்ந்து, பள்ளி பிரையர் பாடலை பாடி மலரும் நினைவுகளை பகிர்ந்தனர். தொடர்ந்து, படுக பாடலுக்கு ஏற்ப கன்னியாஸ்திரிகள் உட்பட அனைவரும் நடனம் ஆடினர். தொடர்ந்து அனைவரும் 'குரூப் போட்டோ' எடுத்து மகிழ்ந்தனர்.