/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார் நகராட்சி தலைவர் போட்டியின்றி தேர்வு
/
குன்னுார் நகராட்சி தலைவர் போட்டியின்றி தேர்வு
ADDED : ஆக 06, 2024 09:48 PM

குன்னுார் : குன்னுார் நகர மன்ற தலைவராக சுசிலா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
குன்னுார் அட்டடி பகுதியை சேர்ந்த ஷீலா கேத்ரின், கடந்த, 2022ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். இவர் கடந்த பிப்., மாதம், 2ம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில், நகராட்சி தலைவர் பதவி காலியாக உள்ள நிலையில் இந்த பதவிக்கு, 16வது வார்டு கவுன்சிலர் சுசிலாவை தலைவராக தேர்வு செய்ய, தி.மு.க., தலைவரான, மாநில முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து, நேற்று நகராட்சி அலுவலகத்தில் நடந்த தேர்தலில் தி.மு.க., கவுன்சிலர்கள் ஒன்று சேர்ந்து நகராட்சி தலைவராக, சுசிலாவை போட்டியின்றி தேர்வு செய்தனர்.
கமிஷனர் சசிகலா முன்னிலையில், துணைத் தலைவர் வாசிம் ராஜா மற்றும் கவுன்சிலர்கள், கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர். போட்டியின்றி தேர்வு செய்வதாக ஏற்கனவே தி.மு.க., அறிவித்ததால், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் இந்நிகழ்ச்சியை புறக்கணித்தனர்.