/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நிலச்சரிவில் உயிரிழந்த குன்னுார் பெண்
/
நிலச்சரிவில் உயிரிழந்த குன்னுார் பெண்
ADDED : ஜூலை 31, 2024 11:57 PM

குன்னுார் : குன்னுாரில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி சென்ற பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் குழந்தையுடன் சூரல்மலையில் நடந்த நிலச்சரிவில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குன்னுார் கரன்சி அய்யப்பன் காலனியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் கவுசல்யா, 26. கோவை ராயல் கேர் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றினார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவர், பீஜீஸ்,36 மற்றும் 9 மாத கைகுழந்தை ஆதியாவுடன் சூரல்மலை பகுதியில் வசித்து வந்தார்.
பீஜீஸ் அங்குள்ள விம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த, 29ம் தேதி நள்ளிரவு ஏற்பட்ட நிலச்சரிவில் மூவரும் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து, இவர்களின் உடல் மீட்கப்பட்ட நிலையில், குன்னுாரில் இருந்து கவுசல்யாவின் தந்தை ரவிச்சந்திரன் மற்றும் தாயார் சந்திரலேகா ஆகியோர் அங்கு சென்று இறுதி சடங்குகள் முடித்து திரும்பி உள்ளனர்.
பீஜீஸ் சகோதரி ஒருவரின், ஒன்பது வயது பெண் குழந்தை இன்னும் கிடைக்காமல் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குன்னுார் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.