/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நாள்தோறும் உலா வரும் 'மக்னா' யானை அச்சத்தில் நடமாடும் குந்தலாடி கிராம மக்கள்

ADDED : பிப் 24, 2025 10:12 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே பிதர்காடு வனச்சரக எல்லைக்கு உட்பட்ட, ஓர்கடவு கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில், மக்னா யானை ஒன்று முகாமிட்டு வருகிறது. இந்த யானை இரவு, 8:00 மணிக்கு மேல் ஓர்கடவு, தானிமூலா, குந்தலாடி, புலியாடி, கடலக்கொல்லி,பொன்னானி உள்ளிட்ட, பகுதிகளுக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளது.
இரவு நேரத்தில், குடியிருப்புகளை ஒட்டிய விவசாய நிலங்களில், விவசாய விளை பொருட்களை சேதப்படுத்தும் இந்த யானை காலை, 6:00 மணிக்கு கிராமத்திலிருந்து சாலைகள் வழியாக வனப்பகுதிக்குள் செல்கிறது.
இந்நிலையில், அதிகாலை மற்றும் இரவில் பல்வேறு தேவைகளுக்காக, வெளியிடங்களுக்கு செல்லும் மக்கள், திடீரென யானையை பார்த்து ஓடி தப்புவது வாடிக்கையாக மாறி உள்ளது.
மக்கள் கூறுகையில்,'இந்த யானையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன்பாக, வனத்துறையினர் அடர் வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'மக்னா யானை குறித்து கண்காணிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.
இப்பகுதியில் அதிகாலை, இரவு நேரங்களில் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். யானை நடமாடுவது குறித்து அறிந்தால், வன ஊழியர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். யானையை விரட்ட மக்கள் செல்ல கூடாது,' என்றனர்.