sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மலை ரயில் பாதையில் தொடரும் மண் சரிவு; ஊட்டி ரயில் ரத்து

/

மலை ரயில் பாதையில் தொடரும் மண் சரிவு; ஊட்டி ரயில் ரத்து

மலை ரயில் பாதையில் தொடரும் மண் சரிவு; ஊட்டி ரயில் ரத்து

மலை ரயில் பாதையில் தொடரும் மண் சரிவு; ஊட்டி ரயில் ரத்து


ADDED : நவ 06, 2024 03:32 AM

Google News

ADDED : நவ 06, 2024 03:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்; நீலகிரி மாவட்டம், குன்னுாரில் கடந்த, 3 நாட்களாக நள்ளிரவில் இடியுடன் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதில், மேட்டுப்பாளையம்- குன்னுார் இடையே மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால், 3 நாட்களுக்கு மலைரயில் ரத்து செய்யப்பட்டது.

மண் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் பெய்த மழையின் காரணமாக மீண்டும், ஹில்குரோவ், மரப்பாலம் பகுதிகளில், 5 இடங்களில் மரங்கள், பாறையுடன் மண்சரிவு ஏற்பட்டது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை பொக்லைன் வரவழைக்கப்பட்டு சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

இந்நிலையில், ஊட்டி- குன்னுார் இடையே பஞ்சாயத்து யூனியன் அலுவலக பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு ரயில் தண்டவாளத்தில் விழுந்தது. இதன் காரணமாக, ஊட்டி-குன்னுார் இடையே தலா, 4 முறை இயக்கப்படும் மலை ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

தென்னக ரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் கூறுகையில்,'குன்னுார்- -கல்லார் ரயில் நிலையங்களுக்கு இடையே மண், பாறை, மரங்கள் சரிந்து விழுந்ததால், அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நாளை வரை மேட்டுப்பாளையம் -ஊட்டி ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஊட்டி -குன்னுார் ரயில் மழை பாதிப்பு இல்லை என்றால் இயக்கப்படும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us