ADDED : மே 28, 2026 05:31 PM
குன்னுார்: குன்னுாரில் பக்ரீத் திருநாளையொட்டி, வண்டி பேட்டையில் இருந்து இஸ்லாமியர்கள் ஊர்வலமாக, ‘மோர்ஸ் கார்டன்’ அருகே ஈத்கா மைதானத்தை அடைந்தனர்.
குன்னுார் சின்ன பள்ளிவாசல் இமாம், முப்தி வசிம் அக்ரம் ஹசனி தலைமையில், சிறப்பு தொழுகை நடந்தது.
தொழுகையில், பெட்போர்டு பள்ளிவாசல் முப்தி முஜிபுர் ரஹ்மான் காஸிமி, பெரிய பள்ளி வாசல் இமாம் வசீம் அக்ரம் மெஹராஜி, ஓட்டுபட்டறை பள்ளிவாசல் முகமது மழாஹிரி , கே.எம்.கே நகர் பள்ளிவாசல் இமாம் ஜஹாங்கீர் கான் உலுாமி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். உலக அமைதி மற்றும் குன்னுார் மார்க்கெட் கடை வியாபாரிகளின் பிரச்னை தீர்வும் பிரார்த்தனை செய்யப்பட்டது. வெலிங்டன் பள்ளிவாசலில் நிமதுல்லாஹ் தாவூதி தலைமையில் நடந்தது.
இதே போல, ஊட்டி, சேலாஸ் உட்பட பல்வேறு இடங்களில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடந்தன. ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
