/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் 300 முதுநிலை காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் ஆக., 7ம் தேதி கடைசி நாள்
/
நீலகிரியில் 300 முதுநிலை காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் ஆக., 7ம் தேதி கடைசி நாள்
நீலகிரியில் 300 முதுநிலை காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் ஆக., 7ம் தேதி கடைசி நாள்
நீலகிரியில் 300 முதுநிலை காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் ஆக., 7ம் தேதி கடைசி நாள்
ADDED : ஜூலை 31, 2024 01:54 AM
ஊட்டி:நீலகிரியில், அரசு கல்லுாரியில் முதுநிலை படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊட்டி அரசு கலை கல்லுாரியில், 18 இளநிலை படிப்புகளும் 15 முதுநிலை படிப்புகளும் உள்ளது. இங்கு, 4,500 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், 2024--25-ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பு, 4 கட்ட கலந்தாய்வுகள் முடிந்துவிட்டது.
அரசு கல்லுாரியில், 20 சதவீத இடங்கள் அதிகரிக்கப்பட்டதால், தற்போது ஊட்டி அரசு கலைக் கல்லுாரியில், 1,300 இடங்களாக அதிகரித்து உள்ளது. இதில், 90 சதவீத இடங்கள் நிரம்பிவிட்டன. மீதமுள்ள இடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கலந்தாய்விற்கு வரும்போது, 10,11,12-ம் வகுப்பு மதிப்பெண் சான்று, மாற்று சான்றிதழ், ஜாதிசான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக முதல் பக்கம் என அசல் மற்றும், 6 நகல்கள் எடுத்து வர வேண்டும்.
பாஸ்போர்ட் அளவு புகைப்படம், 5 எடுத்து வர வேண்டும். கட்டண விகிதம் மாநில பாடத்திட்டம், 4,500 ரூபாய் இதர பாட திட்டம் 5,000 ரூபாய் ஆகும்.
முதுநிலை மாணவர் சேர்க்கை
இதேபோல், ஊட்டி அரசு கலை கல்லுாரியில், 15 துறைகளில் உள்ள, 300 முதுநிலை காலியிடங்களுக்கு தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதன்படி www.tngasa.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு வருகிற 7-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
விண்ணப்ப கட்டணம், 58 ரூபாய் பதிவு கட்டணம், 2 ரூபாய் என 60 ரூபாய் செலுத்த வேண்டும். முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, ஊட்டி அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை சிறப்பு மையங்கள் இயங்கி வருகிறது, தேவைப்படும் மாணவர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.