/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தணிக்கை விண்ணப்பங்கள் 12ம் தேதி கடைசி நாள்
/
தணிக்கை விண்ணப்பங்கள் 12ம் தேதி கடைசி நாள்
ADDED : ஆக 06, 2024 09:46 PM
ஊட்டி: ஊராட்சி, வட்டார அளவிலான கூட்டமைப்புகளின் தணிக்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை:
நீலகிரி மாவட்டத்தில், 2023 -- 24ம் ஆண்டு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தின் கீழ், இயங்கி வரும் சமுதாய அமைப்புகள், ஊராட்சி, வட்டார அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் குறித்து தணிக்கை செய்யப்படுகிறது.
விருப்பமுள்ள தணிக்கையாளர்கள், தணிக்கை நிறுவனங்கள், அரசு துறைகள் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் தணிக்கையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், சுயஉதவி குழுக்கள் வாழ்வாதார திட்ட நடவடிக்கைகளில் நல்ல முன் அனுபவம் தேவை. தேர்வுக்கான தகுதிகள், விதிமுறைகள் குறித்த கூடுதல் விபரங்களை, nilgiris.nic.in என்ற இணையதளத்தில் காணலாம். விண்ணப்பங்களை இம்மாதம், 12ம் தேதி மாலை, 3:00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.