/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மூன்று சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் போராட்டம்
/
மூன்று சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் போராட்டம்
மூன்று சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் போராட்டம்
மூன்று சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் போராட்டம்
ADDED : ஜூலை 02, 2024 12:40 AM
ஊட்டி:மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள மூன்று சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, ஊட்டி, குன்னுாரில் வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி பட்பயர் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற முன்பு நடந்த போராட்டத்திற்கு நீலகிரி மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் மகோதேவன் தலைமை வகித்தார். செயலாளர் மேனகா, இணை செயலாளர் ஸ்ருதி, பொருளாளர் ரேஸ்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்பாட்டத்தில், 100 வக்கீல்கள் பங்கேற்றனர்.
*குன்னுாரில் நடந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு, வக்கீல்கள் சங்க தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் நாகதேவி, பொருளாளர் அற்புதமணி, துணை செயலாளர் சையது முபாரக் முன்னிலை வகித்தனர். 50 வக்கீல்கள் பங்கேற்றனர்.