/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்'; மலை மாவட்டம் முழுவதும் மகளிர் தின விழா அமர்க்களம்
/
'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்'; மலை மாவட்டம் முழுவதும் மகளிர் தின விழா அமர்க்களம்
'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்'; மலை மாவட்டம் முழுவதும் மகளிர் தின விழா அமர்க்களம்
'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்'; மலை மாவட்டம் முழுவதும் மகளிர் தின விழா அமர்க்களம்
ADDED : மார் 09, 2025 10:55 PM

ஊட்டி; நீலகிரி மாவட்டம் முழுவதும், மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
நீலகிரி மாவட்ட காவல்துறை; 'இன்னர் வீல் கிளப் ஆப் ஊட்டி' ஆகியவை இணைந்து, ஊட்டியில் பெண்களுக்காக நடத்திய, 15 கி.மீ., துார மாரத்தான் போட்டியை, எஸ்.பி., நிஷா துவக்கி வைத்தார். எஸ்.ஏ.டி.பி., மைதானத்தில் இருந்து துவங்கிய மாரத்தான், பிங்கர் போஸ்ட் வழியாக, மீண்டும் மைதானத்தை அடைந்தது.
தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், இன்னர் வீல் கிளப் தலைவர் தெல்மாநேதாஜி மற்றும் நிர்வாகிகள், பெண் காவலர்கள் மற்றும் மாணவியர் திரளாக பங்கேற்றனர். அதில், 'மகளிர் உதவி எண்- 181' குறித்தும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும், காவலரின் உதவிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மணிகண்டன், சவுந்திரராஜன், ஊட்டி நகர காவல் துணை கண்காணிப்பாளர் நவீன்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
குன்னுார்
குன்னுார் கரோலினா எஸ்டேட்டில், மகளிர் தினத்தை முன்னிட்டு, 'பர்வத்' கலைக்கூடம் சார்பில் ஓவிய கண்காட்சி நடந்தது. முன்னதாக, 'அனுபவமிக்க கண்கள் -ஒரு கலை ஆய்வு' என்ற தலைப்பில், சிற்ப கலைஞர் வல்சன் கூர்மா தலைமையில், ஓவியர்கள், சுரேகா, அம்பிலி மிதிலி, அனேசர்யா, கர்னல் சுரேஷ், திலீப் குமார் சிபி, தனேஷ் மாம்பா, ஜாலி சுஷன், பொன்மணி தாமஸ், ரமேஷ் நாயர் மற்றும் ஷகீலா மனோஜ் ஆகியோர் ஓவியம் வரைந்தனர். அவை அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டது.
விழாவில், ரத்தினம் நினைவு அறக்கட்டளை நிறுவனர் மூகாம்பிகா ரத்தினம், 'கிளீன் குன்னுார்' நிர்வாக அறங்காவலர் சமந்தா உட்பட பலர் பங்கேற்றனர். வரும், 17ம் தேதி வரை காலை, 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை இந்த கண்காட்சியை நடக்கிறது. தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் பல்வேறு இடங்களை சேர்ந்த, 27 ஓவியர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
குன்னுார் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் சார்பில் நடந்த மகளிர் தின விழாவில், 'பிங்க்கத்தான் ரன்' என்ற பெயரில், மகளிருக்கான வாக்கத்தான் நிகழ்ச்சி நடந்தது. தங்கராஜ் நினைவு ஸ்டேடியத்தில் துவங்கிய இந்த நிகழ்ச்சியில், பங்கேற்ற, 250க்கும் மேற்பட்ட மகளிர், ராணுவ மருத்துவமனை வழியாக, 5 கி.மீ., நடந்து ஸ்டேயத்தை அடைந்தனர். அங்கு ராணுவ மகளிர் நல சங்க தலைவி தனுஸ்ரீ கிருஷ்ணேந்து தாஸ் பரிசுகள் வழங்கினார். துணை தலைவி மாயா குட்டப்பா முன்னிலை வகித்தார். விழாவில், சுமிபத்ரா குழுவினரின் களரி பயிற்சியில், சிறுவர், சிறுமியரின் களரி, வாள்வீச்சு, உள்ளிட்டவை அனைவரையும் கவர்ந்தது.
பந்தலுார்
பந்தலுார் நீதிமன்றத்தில் அலுவலக பணியாளர்கள் மற்றும் பெண் வக்கீல்கள், கேக் வெட்டி கொண்டாடினர். நீதிபதி சிவகுமார் மகளிர் தின வாழ்த்துக்களை கூறி, மகளிர் தின விழாவின் சிறப்பு குறித்து பேசினார்.
மேலும், எருமாடு பகுதியில், 'ஸ்ரேயஸ்' நீலகிரி மண்டலம் சார்பாக மகளிர் தின விழா நிகழ்ச்சி நடந்தது. 'இன்கோநகர்' பகுதியில் துவங்கிய பேரணியை, இயக்குனர் பாதிரியார் குரியன் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, கலாசார மாநாடு நடந்தது. அதில் மண்டல இயக்குனர் பாதிரியார் வர்கீஸ் வரவேற்றார். மதுரை மாவட்ட ஆயர் முனைவர் ஜோசப் மார்தோமாஸ் தலைமை வகித்து, மகளிர் தின விழாவின் முக்கியத்துவம் குறித்து பேசினார். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மண்டல ஒருங்கிணைப்பாளர் குரியாகோஸ் நன்றி கூறினார்.
-- பந்தலுார் அருகே, நெலாக்கோட்டை உட்பிரையர் எஸ்டேட்டில், இந்திய குடும்ப நல சங்கம் மற்றும் 'எவர்கிரீன் வெல்பேர் டிரஸ்ட்' இணைந்து மகளிர் தின விழாவை நடத்தின. எஸ்டேட் துணை மேலாளர் அமல் வரவேற்றார். டிரஸ்ட் நிர்வாகி ரீட்டா மகளிர் தினத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
குடும்ப நல சங்க அலுவலர் சுந்தர்ராஜ், திட்ட அலுவலர் சுபாஷினி ஆகியோர், பெண்களின் திறமை குறித்து பேசினர். நிகழ்ச்சியில், சிறந்த இலை பறிப்பாளராக தேர்வு செய்யப்பட்ட, பெண் தொழிலாளி அஜாரா; விடுப்பு எடுக்காமல் பணிபுரிந்த ரித்திகா, குமாரி ஆகியோருக்கும், மருத்துவ சேவை செய்து வரும் செவிலியர் சுமித்ராவுக்கும் பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. எஸ்டேட் நல அலுவலர் சூரிய பிரகாஷ் நன்றி கூறினார்.