ADDED : ஜூன் 11, 2026 06:24 PM
அ நிறம் | அளவு
ஊட்டி: ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் சிங்க பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை எஸ்.பி., பிருந்தா துவக்கி வைத்தார்.
அதில், இரண்டு உதவி ஆய்வாளர் தலைமையில், 4 பெண் காவலர்கள் இடம் பெற்றுள்ளனர். நாள்தோறும், 2 ஷிப்ட் முறையில் பள்ளி, கல்லுாரி மற்றும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் சிறப்பு அதிரடிப்படை பெண் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களில் வாகனத்தில் ஜி.பி.ஆர்.எஸ்., கருவி, கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட அதிநவீன உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளது. பெண்கள் பிரச்னைகள் குறித்து தகவல் அளித்தால் உடனடியாக அவர்கள் வந்து பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
