/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
லோக்சபா தேர்தல் மற்றும் மகாவீர் ஜெயந்தி நான்கு நாட்கள் மது கடைகள் மூடல்

ADDED : ஏப் 12, 2024 12:10 AM
ஊட்டி:லோக்சபா தேர்தல் மற்றும் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நீலகிரியில், நான்கு நாட்கள் தொடர்ந்துடாஸ்மாக் உட்பட,'பார்'கள் மூடப்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் மதுபான சில்லறை விற்பனை கடைகள், கிளப்கள், ஓட்டல் பார்கள் மற்றும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும்,லோக்சபா தேர்தலை ஒட்டி வரும், 17,18,19ம் தேதிகள் மற்றும் மகாவீர் ஜெயந்தியான, 21ம் தேதிமூடப்படும்.
இந்த உத்தரவை மீறி, எவரேனும் மது விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட விற்பனை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் மீது, தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம், 1937 மற்றும் சம்பந்தப்பட்ட இதர விதிகளின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
குறிப்பிட்ட நாட்களில் மது விற்பனை செய்வதாக, பொதுமக்களுக்கு தகவல் தெரியும் பட்சத்தில், டாஸ்மாக் மேலாளர், குன்னுார், 0423-2234211மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஊட்டி, 0423- 2223802 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.