/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இலக்கிய திருவிழா துவக்கம்; வாழ்நாள் சாதனையாளருக்கு விருது
/
இலக்கிய திருவிழா துவக்கம்; வாழ்நாள் சாதனையாளருக்கு விருது
இலக்கிய திருவிழா துவக்கம்; வாழ்நாள் சாதனையாளருக்கு விருது
இலக்கிய திருவிழா துவக்கம்; வாழ்நாள் சாதனையாளருக்கு விருது
ADDED : மார் 14, 2025 10:22 PM

ஊட்டி; ஊட்டியில் நேற்று துவங்கிய இலக்கிய விழாவில், மொழி பாதுகாவலருக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
ஊட்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க, நீலகிரி நுாலகத்தில், இலக்கியம், கலாசாரம் மற்றும் அறிவுசார் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக, நேற்று இலக்கிய விழா துவங்கியது.
அதில், நாட்டின், 780 மொழிகளை பாதுகாப்பதற்காக, அர்ப்பணிப்புடன் செயல்படும் அறிஞரும் மொழியியலாளருமான டாக்டர் கணேஷ் தேவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை, விழா குழு அறங்காவலர் கீதா ஸ்ரீனிவாசன் வழங்கினார்.
வரும் இரு நாட்களில், விவாதங்கள், அனுபவங்கள், மொழியியல் உரையாடல்கள் இடம் பெறுகின்றன. 40க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் பங்கேற்கின்றனர். இன்று, இந்திய சினிமா பரிணாம வளர்ச்சி விவாதத்தில் இயக்குனர் மணிரத்னம் பங்கேற்ற உள்ளார்.
மறைந்த ஜாகிர் உசேன் நினைவாக, 'தபேலா மேஸ்ட்ரோ இசையின் தாக்கம்' குறித்த அமர்வு இடம்பெறுகிறது.
ரஷ்மி குழுவினரின் யோகா கருத்தரங்கு உட்பட பல்வேறு இலக்கிய விவாதங்களும் நடக்கின்றன. ஏற்பாடுகளை, சங்கீதா ஷெர்னாஸ், சேத்னா, ராதிகா சாஸ்திரி உட்பட ஒருங்கிணைப்பு குழுவினர் செய்து வருகின்றனர்.